Blogger templates

வெள்ளி, 7 மார்ச், 2014

மிஸ்டர் கோ

2014/03/08GTM
a276cf9f-cd54-428b-a183-a789298962bb_S_secvpfசர்க்கஸ் தொழில் செய்யும் 15 வயதான வெய்யின் தாத்தா, அவருக்கு லிங்க் என்னும் பெயருள்ள ஒரு கொரில்லா குரங்கினை விட்டுவிட்டு செல்கிறார்.
பேஸ்பால் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடைய லிங்க் குரங்கிற்கு பேஸ்பால் விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கிறார். எனவே அக்குரங்கு பேஸ் பால் விளையாட்டில் தூள் கிளப்புகிறது.
சர்க்கஸ் கம்பெனியின் அதிகப்படியான கடன் சுமை காரணமாக பேஸ் பால் விளையாட்டின் ஏஜெண்ட் சங்குடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கொரியன் பேஸ் பால் லீக்கில் லிங்க் விளையாட வெய் சம்மதிக்கிறார்.

புதன், 26 பிப்ரவரி, 2014

சினிமா துளிகள்

இது கதிர்வேலன் காதல்

2014/02/26, 03:34.25 PM GPM
காதலர் தினத்தன்று காதலை மையப்படுத்தி வெளிவந்துள்ள படமே ‘இது கதிர்வேலன் காதல்’.
தங்களது முதல் படைப்பான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சுந்தர பாண்டியன்’ படங்களின் வெற்றியை இப்படத்திலும் தக்க வைத்திருக்கிறார்களா நடிகர் உதயநிதியும், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும்?
படத்தின் ஆரம்பத்தில் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்ட நிலையில் ஒரு நபரை மருத்துவமனையின் ஐ.சி.யு வார்டுக்கு அவசர அவசரமாக கொண்டு செல்கிறார்கள்.
உள்ளே போனவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரின் உறவினர்கள் படபடப்புடன் வெளியில் காத்துக் கொண்டிருக்க.... ‘ஆறு மாதங்களுக்க முன்பு...’ என ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நகர்கின்றன.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஓபன் தி டாஸ்மாக்

செவ்வாய், 25 பிப்ரவரி 2014,07;30pm
மான் கராத்தே படத்தில் தேனிசைத் தென்றல் தேவா ஒரு கானா பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடலுக்கு வைத்திருக்கும் பெயர், ஓபன் தி டாஸ்மாக்.இளம் திரை பிரபலங்கள் டாஸ்மாக்கின் இலவச விளம்பரதாரர்களாக மாறி வெகு நாள்களாகிறது. மச்சி ஓபன் த பாட்டில் என்றால் அது பிரேம்ஜி, வெங்கட்பிரபு உள்ளிட்ட கோஷ்டியை குறிக்கும். அவர்களால் பிரபலமானதுதான் இந்த மச்சி ஓபன் த பாட்டில். 

சமந்தா வீசிய தூண்டில்

செவ்வாய், 25 பிப்ரவரி 2014,07;20pm
யார் முன்னணி நடிகை என்பதை அறிந்து கொள்ள எளிய வழி, முன்னணி நடிகர்களுடன் யார் அதிகமாக இணைந்து நடிக்கிறார்கள் என்று பார்ப்பதே. அந்தவகையில் எல்லா நடிகைகளுக்கும் விஜய், அஜீத், சூர்யா முடிந்தால் ரஜினியுடன் இணைந்து நடிக்கவே ஆசை.சமந்தா அஞ்சானில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். முருகதாஸ், விஜய்யின் பெயரிடப்படாதப் படத்திலும் இவர்தான் ஹீரோயின். அஜீத்துடன் நடித்தால் சமந்தாவின் விருப்ப வட்டம் பூர்த்தியாகும்.