செவ்வாய், 25 பிப்ரவரி 2014,07;20pm
யார் முன்னணி நடிகை என்பதை அறிந்து கொள்ள எளிய வழி, முன்னணி நடிகர்களுடன் யார் அதிகமாக இணைந்து நடிக்கிறார்கள் என்று பார்ப்பதே. அந்தவகையில் எல்லா நடிகைகளுக்கும் விஜய், அஜீத், சூர்யா முடிந்தால் ரஜினியுடன் இணைந்து நடிக்கவே ஆசை.சமந்தா அஞ்சானில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். முருகதாஸ், விஜய்யின் பெயரிடப்படாதப் படத்திலும் இவர்தான் ஹீரோயின். அஜீத்துடன் நடித்தால் சமந்தாவின் விருப்ப வட்டம் பூர்த்தியாகும்.
அதனை அவர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.அஜீத் அடுத்து கௌதம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதில் நடிப்பதாக கூறப்பட்ட அனுஷ்கா கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
சமந்தா கௌதமின் விருப்ப நடிகை. அவர்தான் தமிழில் சமந்தாவை அறிமுகப்படுத்தினார். கௌதம் படத்தில் அஜீத்தின் ஜோடி ஸ்தானம் காலியாக இருப்பதை அறிந்தே இப்படியொரு தூண்டிலை வீசியிருக்கிறார்.மீன்கள் சிக்குமா?
யார் முன்னணி நடிகை என்பதை அறிந்து கொள்ள எளிய வழி, முன்னணி நடிகர்களுடன் யார் அதிகமாக இணைந்து நடிக்கிறார்கள் என்று பார்ப்பதே. அந்தவகையில் எல்லா நடிகைகளுக்கும் விஜய், அஜீத், சூர்யா முடிந்தால் ரஜினியுடன் இணைந்து நடிக்கவே ஆசை.சமந்தா அஞ்சானில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். முருகதாஸ், விஜய்யின் பெயரிடப்படாதப் படத்திலும் இவர்தான் ஹீரோயின். அஜீத்துடன் நடித்தால் சமந்தாவின் விருப்ப வட்டம் பூர்த்தியாகும்.அதனை அவர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.அஜீத் அடுத்து கௌதம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதில் நடிப்பதாக கூறப்பட்ட அனுஷ்கா கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
சமந்தா கௌதமின் விருப்ப நடிகை. அவர்தான் தமிழில் சமந்தாவை அறிமுகப்படுத்தினார். கௌதம் படத்தில் அஜீத்தின் ஜோடி ஸ்தானம் காலியாக இருப்பதை அறிந்தே இப்படியொரு தூண்டிலை வீசியிருக்கிறார்.மீன்கள் சிக்குமா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக